HOW TO ACHIEVE A BETTER WORLD OR THE BEST WORLD...???

*SAY NO TO: VIOLENCE/BRUTALITY/KILLINGS/RAPES/TORTURE!
*SAY NO TO:
CORRUPTION/FAVORITISM/DISCRIMINATION!
*SAY NO TO:
IGNORANCE/UNEMPLOYMENT/POVERTY/HUNGER/
DISEASES/OPPRESSION/GREED/JEALOUSY/ANGER/
FEAR, REVENGE!

Wednesday, October 29, 2008

SL: SEE HOW POSTAL SERVICE DISCRIMINATE INDIAN TAMILS!!!

யார் பூனைக்கு மணி கட்டுவது? 10/27/2008

சுமார் 210 வருடங்கள் பழைமைவாய்ந்த அதாவது டச்சுகாரர் இலங்கையை ஆண்ட சமயம் 1798ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை தபால் சேவை அப்போது கிழக்கிந்திய கம்பனியின் கட்டுப்பாட்டில் டச்சு காரர்களின் அலுவலக கடிதங்களை விநியோகம் செய்வதையே தலையாய கடமையாக கொண்டு செயல்பட்டது. 1815ல் ஆங்கிலேயர் இலங்கை முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின் அத் தபால் சேவையை முழு இலங்கை மக்களுக்கும் வழங்க வேண்டிய வழிவகைகளை மேற்கொண்டனர்.

ஆசியாவிலேயே முதன் முதல் தபால் வண்டிச் சேவையை 1832ல் கொழும்பிலிருந்து போhதனை வரையும் பின் 1838ல் கொழும்பிலிருந்து காலி வரையும் ஆரம்பித் ஆங்கிலேயர் இத்தபால் சேவையின் வினைத்திறனைக் கூட்டுவதற்காகவும் விரைவான தபால் சேவையை வழங்கவும் 1882ல் கொழும்பில் முதன் முதலில் தபால் காரியாலயத்தையும் அமைத்தனர். பின் 1892ல் கொழும்பு பேராதனை நடமாடும் தபால் சேவையை ஆரம்பித்தனர்;

சுதந்திரம் அடையும் வரை பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு இன்று இத்தபால் சேவை இலங்கையர் அனைவருக்கும் சேவையை வழங்கும் பொருட்டு தபால் தந்தி தொiலைத் தொடர்புகள் அமைச்சின் கீழ் இலங்கை முழுவதும் சுமார் 19000 ஊழியர்களையும், பிரதான தபாலகம், உப தபாலகம், முகவர் தபாலகம் என 4712 தபாலகங்களையும் கொண்டு பொதுமக்களுக்கு தபால், பொதிகள், பணம் உட்பட பல பொருட்களையும் சேவைகளையும் பெற்றுக் கொள்ளுதல், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல் என்ற முக்கிய செயற்பாடுகளை விணைத்திறன் மிக்க சேவையாக வழுங்குவதனை முக்கிய இலக்காகவும் கொண்டு செயல்படுகின்றது.

இத்தபால் திணைக்களத்தின் பிரதான குறிக்கோள்களில் நாட்டின் எப்பகுதியிலும் வெளிநாடுகளில் எப்பகுதியிலும் உள்ள மக்கள் கடிதம்;, பார்சல்கள், அல்லது எந்த பொருட்களையும் விணைத்திறன் மிக்க முறையில் விரைவாகவும் பாதுகாப்பாகவும் பெற்றுக் கொள்ளுதல், விநியோகித்தல்.

தபால் சேவை வலையமைப்பை விருத்தி செய்தலும் வாடிக்கையாளருக்கு (பொதுமக்களுக்கு) அதிஉச்ச பாதுகாப்பானதும் பொருத்தமானதுமான விணைத்திறன் மிக்க சேவையை வழங்குதல் என்பன மிக முக்கியமானவை பொதுமக்களின் மிக அத்ததியாவசிமான இத்தபால் சேவையின் முக்கியத்துவம், அதன் பயன்கள், விணைத்திறன் மிக்க சேவை என்பன எல்லா மக்களுக்கும் சரியான முறையில் கிடைப்பதை உறுதிப்படுத்வும் அதனை மேலும் பிரபல்யப்படுத்துவதற்கும், அதன் சேவைகளை மேலும் மக்களுக்கு இலகுவாக கிடைக்க புதிய புதிய முறைகளை ஊக்குவிக்கவும் வருடா வருடம் அக்டோபர் 09ம் திகதி உலக தபால் தினமாக கொண்டாடப்படுகின்றது நாமும் கடந்த வாரம் உலக தபால் தினத்தினை வெகு விமர்சியான கொண்டடினோம்.

இச் சேவை இலங்கையர் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும் “நாட்டின் எப்பகுதியிலும் வெளிநாடுகளில் எப்பகுதியிலும் உள்ள மக்கள் கடிதம்;, பார்சல்கள், அல்லது எந்த பொருட்களையும் விணைத்திறன் மிக்க முறையில் விரைவாகவும் பாதுகாப்பாகவும் பெற்றுக் கொள்ளுதல், விநியோகித்தல். என்ற குறிக்கோளில் செயற்பட்டாலும் ஏதோ மலையக மக்களுக்கு மட்டும் இச்சேவை இன்னும் எட்டாக்கனியாகவே உள்ளது.

இதனால் இம்மக்கள் சொல்லொன்னா துன்பங்களை அனுபவித்தாலும் அதிலிருந்து மீள என்ன செய்வதென்றறியாமல் நமது “ தலைவிதி என நினைத்து யாராவது, எப்போதாவது செய்து தருவார்கள் என்ற நினைப்பில் “ சும்மா இருந்து விடுகின்றனர். இவர்கள் சார்பாக பிரதேச சபை, மாகான சபை, பாராளுமன்றம் சென்றவர்கள் இருந்தும் ஏன் தபால் தொலைத் தொடர்புகள் பிரதி அமைச்சராக மலையகத்தவர் இருந்தும் இன்று வரை அதே நிலைதான் இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்ப் பத்திரிகைகளில் காணப்பட்ட “ உரிய நேரத்தில் தபால் கிடைக்காமையினால் பல்கழைக்கழக வாய்ப்பை இழந்த மாணவன் என்ற தலைப்பு அநேக புத்திஐPவிpகளையும், ஏன் அரசியல்வாதிகளையும் கவர்ந்த விடயமாகியது. அதன் பின்னர் ஆணைக்குழுவிற்கு கடிதம், ஐனாதிபதிக்கு கடிதம், தொழிற்சங்க காரியாலயத்திற்கு கடிதம், வேண்டுகோள் என பத்திரிகைத் தலைப்புகள் நாளுக்கு நாள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மலையக மக்கள் தபால் முறையாக அல்லது முற்றாக கிடைக்காததால்; எதிர்நோக்கும் பிரச்சினை இம்மாணவன் பல்கழைக்கழக வாய்ப்பை இழந்தது மட்டுமா?

1. பிறந்தவுடன் வைக்கும் பெயரில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டி ஏற்பட்டால் மூன்று மாதத்திற்குள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தில் பெயரை மாற்ற வேண்டும். ஆனால் இத்தபால் உரிய நேரத்தில் கிடைக்காததினால் பிள்ளையின் பெயரை மாற்றிக் கொள்ள முடியாமல் தவிக்கும் எத்தனையோ பெற்றோரின் பிள்ளைகளின் பிறப்பு அத்தாட்சிப் பத்திரமின்மை;

2. இப் பிறப்பு அத்தாட்சிப் பத்திரமின்மையால் பாடசாலை செல்ல முடியாமை, விளையாடடுபட போட்டிகளில் பங்குபற்ற முடியாமை, அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியாமை சாரதி அனுமதிப்பத்திரம், கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ள முடியாமை.

3. தொழிலுக்கான நேர்முகப் பரீட்சை கடிதங்கள் உரிய நேரத்தில் கிடைக்காததால் தொழல் வாய்ப்பிழந்த இளைஞர் யுவதிகளின் பிரச்சினை,

மற்றும் வங்கியில் அவசரத் தேவைகளுக்காக அடகு வைத்த தங்க நகைகள் மீட்டுக் கொள்ள வேண்டிய கடிதம் உரிய நேரத்தில் கிடைக்காமையால் அவை மூழ்கிப் போன சம்பவங்கள், திருமண அழைப்பிதல் அத் தம்பதியினருக்கு குழைந்தை பிறந்தவுடனேயே கிடைக்கும் அவலம், வெளி நாடுகளில் பல்வேறு துன்பங்களையும் அனுபவித்து உழைத்து அனுப்பும் காசோலைகள் தொலைந்து போதல், பதிவுத் தபால்களை ஒருநாள் சம்பளத்தையும் இழந்து நேரடியாக தபால் நிலையம் சென்று பெற வேண்டிய நிலை, மரண செய்திகள் போன்ற அவசரத் தந்திகள் பிந்தி அல்லது கிடைக்காததால் ஏற்படும் குடும்ப பிரச்சினைகள், நீதிமன்ற ஆணைகள் பிந்தி கிடைப்பதனால் மேலதிக சட்ட சிக்கல்கள்;, அரச சலுகைகளுக்கான தபால் கிடைக்காததால் கிடைக்கும் சொற்ப சலுகைகளும் பெற்றுக் கொள்ள முடியாமை, போன்ற இன்னும் பல இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு இன்றுவரை முகம்nhடுத்து கொண்டிருக்கின்றனர்;

இப்பிரச்சினைகளுக்கு தீர்வுகான்பதற்கான தீpர்க்கமான நடவடிக்கைகள் எதுவுமன்றி தோட்டத்தில் நடைபெறும் தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு கான்பதற்கு எனக் கூறும் தோட்ட காரியாலயத்தில் துரை மற்றும் தலைவர்களுக்கிடையே நடைபெறும் “லேப டே வில் சில தோட்டஙகளில் சில நேரங்களில் கதைப்தோடு நின்றுவிடுகின்றனர். அதற்கு சரியான தீர்வு கான முயற்கிக்காமையினால் சூரியகுமார் போன்ற பலர் இதன் விளைவுகளை அனுபவித்து வருகின்றனர், அனுபவிக்கப் போகின்றனர.;

நோய்க்கான காரனத்திற்கு மருந்து கொடுக்காமல் நோய் அறிகுரிகளுக்கு மருந்து கொடுத்துக் கொண்டே இருந்தால் இதே நிலைமைதான் நீடிக்கும். எனவே இலங்கை மக்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான இத்தபால் சேவையை மலையக மக்களுக்கும் நேரடியாக கிடைக்க வேண்டுமாயின் வேண்டுகோள் விடுப்பதிலும்;, கடிதம் எழுதுவதிலும் வெறுமனே காலத்தை கடத்தி விட்ட மலையக சமூகம் ஆழமாக சிந்திக்க வேண்டிய காலம் இது. இதற்கு விடை கான நம்மை நாமே சில கேள்விகள் கேட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.

1. நாமும் செல்லுபடியான முத்;திரை ஒட்டினாலும் எமக்கு மட்டும் தபால் திணைக்களம் மூலம் நேரடியாக ஏன் வழங்க முடியாது?

2. எமக்கும் தபால் திணைக்களம் மூலம் நேரடியாக கடிதத்தைப் பெற உரிமை இல்லையா?

3. தபால் திணைக்களம் மூலம் நேரடியாக தபாலை முறையாக விநியோகிக்க மற்றவர்களுக்கு உள்ளது போல் எமக்கு சொந்த முகவரி உள்ளதா?

4. தோட்ட காரியாலயத்திடாக வழங்கும் முறையை மாற்ற முடியாதா?

5. நாம் இம்மாற்த்திற்கு தயாரா, யார் இம்மாற்றத்தை ஆரம்பிப்பது?

மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கு நாம் சரியான, நடைமுறையில் சாத்தியமான விடையளிக்க விளைந்தோமெனில் இன்று சூரியகுமாருக்கு நிகழ்ந்த சம்பவங்கள் எதிர்காலத்தில் இன்னும் பல சூரியகுமார்களுக்கும் நடக்க போகும் பல்வேறு துரதி~;டமான சம்பவங்களைத் தடுத்துக் கொள்ளலாம். எனவே "நன்றே செய் அதனை இன்றே செய் என்ற பொன் மொழிக்கேற்ப இன்றே ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அதற்கான சாதகமான சூழ்நிலை (மனித வளமும், அரசியல் பலமும்,) மிகவும் பிரகாசமான முறையில் மலையகத்தில் காணப்படுகின்றது. விசேடமாக பிரதி தபால் தந்தி தொலைத் தொடர்புகள் அமைச்சர் மலையகத் தமிழராக கானப்படுவது மிகச சாதகமானது.

அத்துடன் பல தசாப்த காலங்களாக மலையக மக்களை முன்னேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படும் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்;கள், சிவில் அமைப்புகள், புத்திஜீவிகள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள், பல்கலைக்கழக சமூகத்தினர், மேலும் மேலும் கருத்தரங்குகள், ஊர்வரலங்கள், மாநாடுகள், மலசலக்கூடங்கள் கட்டுதல், நடமாடும் சேவைகள், விழாக்கள் மட்டும் நடத்தாமல் மலையக மக்களும் இலங்கையர் என்ற எண்ணம் வரத் தடையாக இருக்கும் இத் தபால் சேவை போன்ற அமைப்பு ரீதியான மற்றும் கொள்கை ரீதியான வேறுபாடுகளில் மாற்றம் கொண்டுவர தமது காலத்தையும், வளங்களையும், நிபுணத்துவத்தையும் முறையாக பயன்படுத்தினால் இந்நிலமை மாற்றமடையும் காலம் வெகு தூரம் இல்லை.

இத்தபால் சேவையில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை ஆனால் வரும் சவால்களுக்கு முகம் கொடுத்து யார் இதனை ஆரம்பிப்பது? என்ற கேள்வியையே எல்லோரும் கேட்டுக்கொண்டிருக்கின்றனர் எவ்வாரெனில் பூனைக்கு மணி கட்டுவது யார் என்பது போல,


POSTED BY : Weerasingham (Sri Lanka) email - weerasingham@car
courtesy: webmaster@virakesari.lk

No comments: